பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – சிவசேனா
25 Jan,2020
பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று (சனிக்கிழமை) கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில், ‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இதில் எந்த சந்தேகமோ, மாற்றுக் கருத்தோ இல்லை’ என குறிப்பிட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக பா.ஜ.க வை கடுமையாக விமர்சிப்பதை சிவசேனா வழக்கமாகக் கொண்டுள்ளது.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் கண்டனத்திற்குரிய வகையிலும் சிவசேனா தனது நாளேட்டில் கட்டுரை வெளியிட்டு வருகின்ற நிலையில், இன்று இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.