நித்தியானந்தா கரீபியன் தீவில் பதுங்கியிருப்பதாக தகவல்!
23 Jan,2020
சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகேயுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ கடவுச்சீட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் குறித்த தகவலை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், அவரை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக அவரது அனைத்து நகர்வுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.