பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கொன்ற வனுக்கு தூக்குஸ!
23 Jan,2020
நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் சர்வசாதாரணமாக நடந்து வரும் காலக்கட்டத்தில், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கயவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது ராஜஸ்தான் நீதிமன்றம்.
ராஜஸ்தான் மாநிலம் Kota அருகே உள்ள நயபுரா என்ற பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு வேலை முடிந்து வீடு திரும்பிய போது 17 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளான், தனியார் கிடங்கு ஒன்றில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவன்.
இந்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது தான் பிரேத பரிசோதனையில் இறந்த பெண் 4 மாத கர்ப்பம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதனை அடுத்து டிஎன்ஏ மாதிரியை சேகரித்த போலீஸார், கொலை குற்றவாளி மரணித்த பெண்ணின் தந்தை தான் என்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து பெண்ணின் தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெற்றவன் என்ற போர்வையில் அந்த காவலாளி செய்த அக்கிரமங்கள் தெரிய வந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட தன் பெண்ணை, கணவர் நீண்ட நாட்களாக பலாத்காரம் செய்து வந்ததாகவும் அதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் பெண்ணின் தாய்.
இதனை அடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த கயவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாதங்கள் முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சிறுமியின் தந்தை தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர குற்றம், மனித சமுதாயத்திற்கு மிகவும் வெட்கக்கேடானது என்று கூறியது
எனவே இந்த குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் ரூ20000 அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பு அளித்தது.