ஒரே அறையில் தங்கியிருந்த 8 பேர் பலிஸ சுற்றுலா சென்றபோது விபரீதம்!
22 Jan,2020
நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 பேர், தங்கும் விடுதியொன்றின் அறையில், உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் (Kathmandu) இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில், டாமன் (Daman) என்ற சுற்றுலா தளம் உள்ளது.
இந்தியாவின் காஷ்மீரை போன்ற டாமனுக்கு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றிருந்தனர். அதில், 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர், நேற்றிரவு ஒரே அறையில் தங்கினர். கடுங்குளிரிலிருந்து தப்பிப்பதற்காக, கேஸ் மூலம் இயங்கும் ரூம் ஹீட்டரை பயன்படுத்தினர்.
இந்நிலையில், இன்று காலையில் மற்ற அறைகளில் தங்கியிருந்தவர்கள் வந்துபார்த்தபோது, 8 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
ஹீட்டரை பயன்படுத்தியபோது, அறை ஜன்னல்களை லேசாக திறந்து வைத்திருக்காமல் இருந்திருக்கலாம் என்றும், இதனால், மூச்சுத் திணறி அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் நேபாள போலீசார் சந்தேகிக்கின்றனர்.