அக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்ஸகார்களில் என்ன மாற்றம்?
21 Jan,2020
பாதசாரி பாதுகாப்பு அம்சங்கள் (Pedastrian safety) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக இருக்கவேண்டும் என இந்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் (Morth) அறிவித்திருக்கிறது. சாலை விபத்துகளால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்.
சாலைப் பாதுகாப்பு
சாலை விபத்தில் மரணிக்கும் 1.5 லட்சம் மக்களில் 60 சதவிகிதம் பேர் பாதசாரிகள்தான் என்கின்றன தரவுகள். சாலை விபத்தால் பாதிக்கப்படும் பாதசாரிகளைக் காக்கவே இந்த பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிமுறைகள். இதன்படி, அனைத்து கார்களிலும் பெடஸ்ட்ரியன் சேஃப்ட்டி மென்பொருள் மற்றும் சென்சார்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
காரின் முன்பக்கம் இருக்கும் இன்ஃபிராரெட் சென்சார்கள், காரின் ஏர்பேக்கை இயக்கும் `ஏர்பேக் கன்ட்ரோல் யூனிட்’ என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதசாரி யார் மீதாவது கார் மோதும்போது இந்த சென்சார்கள் அதை உணர்ந்து காரின் ஹூட் பகுதியைக் கொஞ்சமாகத் திறந்திடும். இதனால், காரில் இருப்பதிலேயே கடுமையான பகுதியான இன்ஜின் மற்றும் சேஸியின் மீது விபத்துக்குள்ளானவர் மோதாமல் தடுக்கப்படும்.
விபத்தில் வெளியாகும் அனைத்து விசையும் காரின் ஹூட் மீது செலுத்தப்பட்டு, பெடஸ்ட்ரியனுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கப்படும். மென்பொருள் மட்டுமல்ல, அக்டோபர் மாதம் முதல் வரப்போகும் அனைத்து வாகனங்களின் டிசைனும் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
Report this ad
Report this ad
அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது சாலைப் பாதுகாப்பில் இந்திய வாகனங்களின் நிலை பின்னடைவிலேயே இருக்கிறது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கடுமையான விதிமுறைகள் மூலம் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முயன்று வருகின்றன.
பெடஸ்ட்ரியன் ஏர்பேக்
இதுவரை சொகுசு வாகனங்களில் மட்டுமே இருந்த பல பாதுகாப்பு அம்சங்கள் இப்போது விலை குறைவான மாஸ் மார்க்கெட் கார்களிலும் வரத்தொடங்கிவிட்டன. கிராஷ் டெஸ்ட், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ், ஏர்பேக் என 2019-ல் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்திய கார்களைப் பொறுத்தவரை தற்போது பாசிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களே அதிகம். ரேடார் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இயங்கும் ஆக்டிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக் (Autonomous braking) வசதிகள் 2020-ம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மைலேஜ், விலை மற்றும் பிராண்டை அடிப்படையாகக் கொண்டு காரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறைந்து, தற்போது மக்கள் தங்கள் கார் தேர்வில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாக கன்ஸ்யூமர் ரிப்போர்ட் சர்வேகள் கூறுகின்றன