11 பேர் தற்கொலை செய்து கொண்ட ‘திகில்’ வீடு மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றம்!
30 Dec,2019
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட திகில் வீடு, மருத்துவ பரிசோதனை மையமாக உருமாற்றப்பட்டுள்ளது.
டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் சகோதரர்கள் பவனேஷ், லலித் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக தூக்கில் தொங்கினர்.
கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் எழுதிய டைரிகுறிப்புகள் பல்வேறு அமானுஷிய கதைகளை உருவாக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மோகன் சிங் என்ற மருத்துவர் இந்த வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். மேலும் தனக்கு மூட நம்பிக்கை இல்லாததால் இந்த வீட்டை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.