ஆண்டுக்கு 10,000 பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக தகவல்!
29 Dec,2019
தமிழகத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக இங்கிலாந்து பல்கலைக் கழக உதவி பேராசிரியரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான சக்திவேல் வையாபுரி தெரிவித்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், எந்த வகையான பாம்பு கடித்தது என்பதை கண்டறிவதற்கான கருவி தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் அதன்மூலம் ஒரு சொட்டு ரத்தத்தை வைத்து எந்த வகை பாம்பு கடித்துள்ளது என்பதை அறிந்து சிகிச்சை தர முடியும் என்றும் உதவி பேராசிரியர் சக்திவேல் வையாபுரி தெரிவித்துள்ளார்