வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கான கட்டுப்பாடு தளர்வு!
28 Dec,2019
i
வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுதும் விசா அளிக்க உதவும் oveseas citizen of india என்ற அடையாள அட்டைக்கு பயண கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
OCI அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 20 வயதுக்கு உட்பட்டிருந்தாலோ 50 வயதுக்கு மேற்பட்டிருந்தாலோ ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போது கடவுச்சீட்டை புதுப்பிக்கவும் மறுபதிவு செய்வதும் கட்டாயமாக இருந்து வருகிறது.
இந்த கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டிருபபதாகவும், OCI அட்டை வைத்திருக்கும் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் மறுபதிவு செய்வது கட்டாயமில்லை எனவும் உள்துறை அமைச்சகம் ருவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு தளர்வானது எதிர்வரும் ஜூன் மாதம் வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.