சீமானுக்கு நித்தி திடீர் நிபந்தனை!
20 Dec,2019
நித்தியின் கைலாசாவில் ராணுவ அமைச்சராக விரும்புவதாக சீமான் தெரிவித்திருந்த நிலையில், சீமான் அரசியலை விட்டு விலகி, மீனாட்சியின் பாதத்தை வணங்கினால் கைலாசாவில் குடியுரிமை வழங்க தயார் என்று நித்தியானந்தா சீரியசாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது குடியுரிமை பறிக்கப்பட்டால், தான் நித்தியானந்தாவின், கைலாசா நாட்டிற்கு சென்று ராணுவ அமைச்சராகி விடுவேன் என்று வேடிக்கையாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சீமானை, கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்க நித்தியானந்தா சில நிபந்தனைகளை விதித்துள்ளார். ஸ்ரீகைலாசா ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும் தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என்று ஆரம்பத்தில் கொந்தளித்துள்ள நித்தி, சீமான் அரசியலை விட்டு விலகி, திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி விட்டு, மீனாட்சியின் பாதம் வணங்கினால், சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் என்று சீரியசாக நிபந்தனையும் வித்தித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தன்னை சாமியாராக செல்லும்படி தனது மனைவி அறிவுறுத்தியதாகவும், தனக்கு வாக்களிக்காவிட்டால் நீண்ட முடி வளர்த்து ஸ்ரீ ஸ்ரீ சீமானந்தாவாக மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைக்கப்போவதாக, சீமான் கல கலப்பாக பேசியிருப்பது குறிப்பிடதக்கது