இந்திய தலைநகரில் தற்கொலை செய்துகொண்ட தமிழர்!
15 Dec,2019
டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த நபர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். மனைவி, குழந்தை மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவர், டெல்லி ஜவகர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த டெல்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி, வீட்டிற்கு சென்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக தங்களது 5 வயது மகளையும் தூக்கிலிட்டு கொலை செய்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள டெல்லி போலீசார், பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்