வடக்கு, கிழக்கில் இருந்து உங்கள் பாசிச கையை எடுங்கள் – தனியாக போராடும் சிறுமி!
13 Dec,2019
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக போராடியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நீண்ட விவாததிற்கு பிறகு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமுலுக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், குறித்த கலவரத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக பதாகை ஏந்தி, போராடியுள்ளார்.
குறித்த சிறுமி ஏந்தியிருந்த பதாகையில், ‘அரசியலமைப்புச் சட்டம் தற்போது தேவைக்கு அதிகமானதாகி விட்டது. என்னுடய வடகிழக்கு மாநிலங்களிலிருந்து உங்களின் பாசிச கைகளை எடுங்கள்’ என எழுதியுள்ளார்.