நித்தியானந்தா தொடர்பான வழக்கில் பெண் சீடர்கள் பிரமாண பத்திரம் தாக்கல்!
12 Dec,2019
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தொடர்பான வழக்கில், திடீர் திருப்பமாக பெண் சீடர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தாங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது 2 மகள்களை மீட்டுதரக்கோரி பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அண்மையில் மனு விசாரணையின்போது, ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தற்போது இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
நித்தியானந்தாவும், பெண் சீடர்களும் எங்குள்ளனர் எனத் தெரியாமல் போலீஸார் தவித்த நிலையில், இந்த தகவல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது