நித்தி? இருப்பிடத்தை காட்டிக்கொடுத்த ஈகுவடார் தூதர்!
10 Dec,2019
ஹைதி தீவுக்கு நித்தியானந்தா தப்பித்துவிட்டதாக இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென் அமெரிக்காவின் ஈகுவடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறி நித்தியானந்தா பிரபலமானார். அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தி அனைத்தையும் மறுத்துள்ளது ஈடுவடார் அரசு.
இது குறித்து இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ தகவல் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டிற்கு நித்யானந்தா வந்தார்.
அங்கிருந்த படியே தனக்கு சர்வதேச புரடக்ஷன் ஸ்டேட்டஸ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இவரது கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர், அதே ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தற்காலிக விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து அகதி அந்தஸ்து வழங்கக் கோரி நித்யானந்தா செய்த விண்ணப்பத்தை ஈக்வடார் தேசிய ஆணையம் நிராகரித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்வடார் நாட்டில் இருந்து வெளியேறினார். அப்போது ஹைதி தீவிற்கு தான் போகிறேன் என்று கூறிச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசா என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.