அவனா நீஸஸ? ஐ. நா. கடிதத்தால் அம்பலமான நித்தி..!
06 Dec,2019
தனித்தீவில் தான் அமைத்துள்ள கைலாசா நாட்டில் ஆண், பெண் தன்பாலினசேர்க்கை உள்ளிட்ட 11 விதமான பாலியல் செய்கைகளை சட்டப்படி அங்கீகரிப்பதாகவும், இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்,எஸ் போன்ற இயக்கங்களால் ஆன்மீக ஆராய்ச்சிக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளான்.
பெங்களூரு ஆசிரமத்தில் தனது சிஷ்ய லேடிகளுடன் குதுகலமாக அமர்ந்து கருத்து சொல்லி வந்த நித்தியானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கியதால் போலீசில் சிக்காமல் இருக்க தன்னுடைய சிஷ்ய லேடிகளுடன் தலைமறைவானான்
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்து நேபாளம் வழியாக தப்பிய நித்தி தென் அமெரிக்கா சென்று ஈகுவடார் நாட்டில் தான் வாங்கியுள்ள தனி தீவை தனி நாடாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறான்
அங்கிருந்தபடியே கிரீன் மேட் உதவியுடன் சத்சங் என்ற பெயரில் அவ்வப்போது உளறி வரும் நித்தி, கடந்த செப்டம்பர் மாதமே தனி நாடு உதயமானதாக அறிவித்ததாக கூறப்படுகின்றது. நித்தியின் பேச்சை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில் ஐ.நாவுக்கு அவர் அனுப்பி வைத்த கடிதம் மூலம் நித்தி எத்தகைய வக்கிரபுத்திக் கொண்டவன் என்பது அம்பலமாகி உள்ளது.
தன்னுடைய நாட்டில் என்னென அமைச்சகங்கள் உள்ளது என்பதையும் நாட்டின் சட்ட, திட்டங்களையும் கொள்கைகளையும் 40 பக்க கடிதமாக எழுதி ஐ. நாவுக்கு அனுப்பி அங்க்கீகரிக்க கோரிக்கை விடுத்துத்துள்ள நித்தி, ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத தன்மை கொண்ட தானே தனிப்பெரும் தலைவர் என்று அறிவித்துக் கொண்டுள்ளான்.
பாலியல் குற்றங்களுக்கு இந்திய சட்டங்கள் தொடர்பாக தனக்கு கடுமையான அச்சுறுத்தல்களை கொடுத்ததால் தான் தனி நாடு அமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளான் நித்தி.
பாலியல் தொடர்பாக விசாலமான பார்வை இந்தியாவில் இல்லை என்றும், இயற்கையின் ஒழுங்கிற்கு எதிரான சரீர உறவை தடை செய்யும் 377 என்ற இந்திய சட்ட பிரிவு இருப்பதால் தான் அங்கு பாலியல் தொடர்பான குற்றங்களும் கொலைகளும் அரங்கேறுகிறது என்று தெரிவித்துள்ளான் நித்தி.
377 வது பிரிவை நீதிமன்றமே நீக்கிய பின்னரும் காவல்துறையினர் நினைத்தால் இந்த சட்டங்களை பயன்படுத்தி யாரையும் கைது செய்வது, அச்சுறுத்துவது இடத்தை விட்டு வெளியேற்றுவது, பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளான்.
இந்தியாவில் தனிநபர் ஒருவர் “இயற்கைக்கு மாறான செக்ஸ் அல்லது ஓரினச்சேர்க்கை நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அவர்களை குற்றவாளி என்று கருதுவதாக ஆதங்கப்பட்டுள்ளான் நித்தியானந்தா.
இந்துத்துவா என்ற பெயரில் இயங்கும் போர்க்குணமிக்க அமைப்புகளான பிஜேபி, ஆர்எஸ்எஸ், வி.எச்.பி மற்றும் பஞ்ரங்தள் போன்றவை இந்தியாவில் வன்முறை கலாச்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்குவதாகவும், இவை அடிப்படைவாத சுவிசேஷ கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளான்.
இதையெல்லாம் களையும் பொருட்டு தன்னுடைய கைலாச தேசத்தில் இயற்கைக்கு மாறாக சேர்ந்திருப்பது, ஆண், பெண் தன்பாலின சேர்க்கை, திருநங்கைகளுடன் லயித்திருப்பது, உள்ளிட்ட 11 விதமான பாலியல் சம்பவங்களை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளான் நித்தி.
இந்தியாவில் “இயற்கைக்கு மாறான பாலியல்” தொடர்பான குற்றச்சாட்டுகளை தான் அடிக்கடி எதிர்கொள்வதால், ஆண் துறவிகள் மட்டுமல்லாமல் பெண் சாமியார்கள் மீதும் தாக்குதல் நடப்பதாகவும், இதனால் இந்தியா தன்னிடம் உள்ள பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளான் நித்தி
தனது தேசம் ஓரின சேர்க்கை திருமணத்தை கொண்டாடும் என்று குறிப்பிட்டுள்ள நித்தி. ஆண்களை கட்டுப்படுத்துவதை விட இதுபோன்ற சலுகைகளை வழங்கினாலே துறவற பெண்களையும் ஒழுங்குபடுத்த இயலும் என்றும் கூறியுள்ளான். இதற்கு பின்னரும் நித்தி போன்ற ஆசாமியை, சாமியார் என்று நம்பி தீவில் தங்கி இருப்பவர்களை நினைத்து அனுதாபப்பட மட்டுமே முடிகின்றது.
ரஞ்சிதா விவகாரத்தின் போதே நான் அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டேன்னு நித்தி சொன்ன போது பலரும் நம்பவில்லை, இப்போது இந்த கடிதத்தை பார்த்தால் அவனா நீ..? என்று கேட்க தோன்றுகிறது..!