ஐ.நா.சபையை நாடும் நித்யானந்தாஸ!
05 Dec,2019
உலகம் முழுவதும் ஆதரவற்ற இந்துக்களுக்காக கைலாசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள சாமியார் நித்தியானந்தா தனது நாட்டுக்கு அங்கீகாரம் கோரி ஐநா.சபையை அணுக திட்டமிட்டுள்ளார்.
நித்தியானந்தாவின் சட்டவல்லுனர்கள் குழு இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசா என்ற தனிநாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்குத் திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தாம் தனிநாடு அமைத்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக ஐநாவுக்கான நித்யானந்தாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகமதாபாத் ஆசிரமத்தில் பெண்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாகவும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் நித்யானந்தா மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து கைது நடவடிக்கையை தவிர்க்க தலைமறைவாகி விட்ட நித்யானந்தா ஈக்வடார் கடலோரம் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைசாலா எனப்பெயரிட்டு அதனை தனிநாடாகவும் அறிவித்துள்ளார்.
அந்நாட்டுக்கு தனிக்கொடியும் முத்திரை இலச்சமும் கூட நித்யானந்தா வெளியிட்டுள்ளார். இந்து சமயத்தை வளர்க்கவும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அடைக்கலம் தரும் நாடாகவும் தமது நாடு இருக்கும் என்று நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இந்த நாட்டில் குடியேற விரும்பும் மக்களில் மிகவும் சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றும், நித்யானந்தாவின் சீடர்களாக அவர்கள் மாற வேண்டும் .
கைலாசா நாட்டின் பிரதமர் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றால்தான் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அந்நாடு தனி பாஸ்போர்ட்டை வழங்கும். தனி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் , ஆங்கிலம், தமிழ் ,சமஸ்கிருதம், ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கும் என்று நித்யானந்தாவின் இணையதளம் அறிவித்துள்ளது. இந்திக்கு இங்கு இடமில்லை