தனது 105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மூதாட்டி
20 Nov,2019
இந்தியாவின் கேரளாவில் 105 வயதுடைய பெண்மணி 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நதியாவின் அகேரள அரசு தற்போதுள்ள முறையான கல்வி முறைக்கு சமமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் படிப்பில் ஆர்வம் உள்ள எந்த வயதினரும் கல்வி பயின்று தேர்வெழுதலாம். அவ்வகையில் 105 வயதுடைய பெண்மணி ஒருவர் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா பகுதியைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதில் பாகிரதியின் தந்தை இறந்ததால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதன் பின்னர், திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் மூழ்கிப்போனார்.
ஆனால், கேரள அரசின் இந்த திட்டத்தின் மூலம் மீண்டும் தனது கல்வியை தொடர வாய்ப்புள்ளதாக கருதிய அவர், கேரளா எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்து கொண்டார். மொத்தம் 19 ஆயிரத்து 950 பேர் கலந்து கொண்ட இந்த தேர்வில் பெரும்பாலோனோர் இளவயதுடையவர்களே.
இதற்கு முன்பு இந்த தேர்வில் கலந்து கொண்ட அதிக வயதுடையவர் ஆழப்புலா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தியயானி அம்மாள் (வயது 96). 43 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் அவர் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது