ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!
16 Nov,2019
ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான்
இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு
தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட இந்த சர்ச்சைகளும் அங்கும் இங்குமாக
கிளம்பிக் கொண்டு தான் இருக்கின்றன.
அரசு தன்னால் முடிந்த வரை ஆதாரை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும், ஆதார்
தரவுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்யவும்
முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த முயற்சியில் ஒரு நல்ல விஷயமாக, தற்போது ஆதாரை வங்கிக் கணக்கு தொடங்க
பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது
ஆதார் வங்கி கணக்கு
இதெல்லாம் பழைய விஷயம் தானே. வங்கிக் கணக்கைத் தொடங்க, பல மாதங்களாக ஆதார்
அட்டையை பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். எனக் கேட்கிறீர்களா..?
ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை.
அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்..? சில
வங்கிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
முந்தைய நடைமுறை
பொதுவாக வங்கிக் கணக்கைத் துவங்க கே வொய் சி டாக்குமெண்டுகளை வங்கி
கேட்கும். அப்போது முகவரி சான்றுக்கு நம்மிடம் இருந்து ஏதாவது அடையாள
அட்டையைக் கேட்பார்கள். இப்படி முகவரிக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்த பின்,
டிஜிட்டல் சரிபார்ப்புக்கு ஆதாரையும் சமர்பிக்கச் சொல்கிறார்கள். ஆதாரிலும்
ஒரே முகவரி இருந்தால் தான் எடுத்துக் கொள்வோம் என சில வங்கிகள் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
இனி முதல் இப்படித் தான்