வேலூர் சிறையில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி சந்திக்க அனுமதி!
15 Nov,2019
வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க, அவரது மனைவி நளினியை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் அண்மையில் ப்ளாக்- 1 சிறையில் அண்மையில் சிறைத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், முருகனின் அறையில் இருந்து செல்போன், கத்தி, பழைய ப்ளேடு உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த காரணத்தினால், 3 மாதத்திற்கு முருகனை யாரும் சந்திக்க கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தண்டனையை திரும்ப பெற்றுக்கொள்ள சிறை துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என ஆணையிட்டனர்.
முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட அறிவுறுத்துமாறு மனுதாரர் வழக்குரைஞரிடம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்