ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்,!
14 Nov,2019
தெலங்கானாவில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்துள்ளது.
பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது செய்த போலீசார் 7 கோடி ரூபாய்க்கு கள்ளநோட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் தொடர்ச்சியாக மன்சூரு அடுத்த மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது