விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு!
12 Nov,2019
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டுகால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபின் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டு, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மே 14ம் தேதி தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஈழக்கொள்கையை விடுதலைப்புலிகள் விடவில்லை என்றும், நிதிதிரட்டி வருவதாகவும் இந்த அமைப்பை ஒன்று திரட்ட முயற்சி நடப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ராஷேகல் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
டெல்லி மற்றும் சென்னையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை உறுதி செய்து அந்த தகவலை மத்திய அரசுக்கு தீர்ப்பாயம் அனுப்பியுள்ளது.