பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : முக்கிய குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் இரத்து!
01 Nov,2019
பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரோயக வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீதான குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை காணொலியாக எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து மேற்படி குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது