சுர்ஜித்தின் உடல் மீட்கப்படவில்லை; வெளிவந்த தகவல்!
30 Oct,2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் இன் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை எனவும் சிறுவனின் கைகள் மட்டும்தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது எனவும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பக்கவாட்டில் குழி அமைத்து அதன் மூலம் வீரர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
அந்தவகையில் இரவு சரியாக 09:55 மணிக்கு , தீயணைப்பு வீரர் அஜித் குமார் என்பவர் குழிக்குள் இறங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அதிர்ச்சித் தகவலை கூறியிருந்தார்.
இதனையடுத்து சுஜித் இன் உடல் ஏர் லாக் செய்யப்பட்டு மேலே கொண்டுவரப்பட்டது . அப்படி கொண்டு வந்த உடலை பிளாஸ்டிக் கவரின் மூலம் கவர் செய்து எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்டது சுர்ஜித் -இன் கைகள் மட்டும் தான் என்றும் அவரது பெரும்பகுதியான உடல் பகுதிகள் அந்த குழியின் உள்ளே புதைக்கப்பட்டது என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ஏர்லாக் மூலம் சிறுவன் சுர்ஜித் -ன் உடலை மேலே இழுத்த பொழுது அவரது கைகள் மட்டும்தான் கிடைத்ததாகவும் அவருடைய உடல் பகுதி குழியினுள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சிறுவனின் பெரும்பகுதியான உடல் மிகுந்த ஆழத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆகையால் கைகளை மட்டும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறுவனின் மற்ற உடல் பாகங்களை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் உடலை முழுவதுமாக மீட்டு விட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட நிலையில் , சிறுவன் சுஜித்-ன் கைகள் மட்டும்தான் மீட்கப்பட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.