புதிய இயந்திரம் மூலம் சுஜித்தை மீட்க முயற்சி..!
28 Oct,2019
அதிக திறன் கொண்ட இயந்திரம் மூலம் சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு, சுஜித்தை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில், கடந்த 25ம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் எனும் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க மேற்கொண்ட பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும்போது பாறைகள் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் துளையிடும் பணி தொடங்கியுள்ளது.
இந்த இயந்திரம், முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி, 64 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
.இந்நிலையில்,மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.