பெற்ற மகனையே சுட்டுகொன்ற காவலர்!
26 Oct,2019
உத்தர பிரதேசத்தில் காவல்நிலையத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை, காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலிலுள்ள சௌரி-சௌரா காவல்நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் அரவிந்த் யாதவ். அவர் காவல்நிலையத்தில் பணியிலிருந்த போது, அவரது முதல் மனைவியின் மகன் விகாஸ் யாதவ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் அரவிந்த் யாதவ், தாம் வைத்திருந்த துப்பாக்கியால் தனது சொந்த மகனை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காவலர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்த உரிமத்துடன் கூடிய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வட்டார அலுவலர் சுமித் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.