ராஜீவ் காந்தி கொலை விவகாரம் : தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்ததாக
18 Oct,2019
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து, தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஆளுநரின் குறித்த முடிவு எழுத்துபூர்வமாக தமிழக அமைச்சரவைக்கு அனுப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
இதன்படி ஏழுபேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருப்பினும் எழுவர் விடுதலையில் ஆளுநர் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றார். இந்நிலையில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு முன்பதாகவும், 2014, 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.