காஷ்மீர் விவகாரம் : சுற்றுலா பயணிகளுக்கான தடை நீங்கியது!
11 Oct,2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் விலக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், பொலிஸார் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளை காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு அம்மாநில அரசு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.