7 தலை பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாக தகவல் உண்மையா?
11 Oct,2019
பெங்களூரு அருகே 7 தலைகள் கொண்ட பாம்பின் தோல் கோவில் அருகே கிடப்பதாக வீடியோ வைரலாகும் நிலையில், அப்படியொரு பாம்பு இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மரிகவுடண்ண டோட்டி என்ற கிராமம் பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு 7 தலைகள் கொண்ட பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. கோவில் அருகே காணப்பட்டதால் கதைகள், காவியங்களில் வரும் 7 தலை சர்ப்பமாக இது இருக்கும் என தகவல் காட்டுத் தீ போல பரவியது.
இதுகுறித்த தகவல் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியான நிலையில் 7 தலை பாம்பின் தோலைக்காண மக்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும், இப்படியொரு பாம்பு நிஜத்தில் இருக்க வாய்ப்பில்ரைல என பாம்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.