சீன ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பயணிகள் விமானங்கள் பறக்க தடை!
10 Oct,2019
சீன ஜனாதிபதி சி ஜிங்பிங் எதிர்வரும் 11ஆம் திகதி அரசுமுறை பயணமாக சென்னை வருகிறார்.
இதன்காரணமாக சென்னையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் இருந்து பயணிக்கவுள்ள பயணிகள் விமானம் மற்றும், சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விமானங்களின் நேரப்பட்டியலை மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வரை எந்த விமானமும் பயணிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.