“சிவன் தூய்மையை விரும்புபவர் என்பதால் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்கிறேன்” ; சிவன் கோயிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்..!.
01 Oct,2019
முஸ்லிம் முதியவர் ஒருவர், சிவன் கோயிலை சுத்தம் செய்வது முதல், விளக்கு ஏற்றுவது வரை அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலை, முஸ்லிம் முதியவர் மோதிபர் ரஹ்மான் (73) என்பவர் பராமரித்து வருகிறார். கோயிலை சுத்தம் செய்வது முதல், விளக்கு ஏற்றுவது வரை அனைத்து பணிகளையும் அவரே மேற்கொள்கிறார். சிவபெருமானை ‘நானா’ என அன்புடன் அழைக்கும் அவர், மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து மோதிபர் ரஹ்மான் கூறியதாவது: “எனது மூதாதையர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் கேட்டுக் கொண்டதன்படி, பரம்பரை பரம்பரையாக கோயிலை பராமரிக்கும் பணியை செய்து வருகிறோம்.
சுமார் 500 ஆண்டுகளாக எனது குடும்பத்தார் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். என் ‘நானா’ (சிவன்) தூய்மையை விரும்புபவர் என்பதால் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்கிறேன். எனக்குப் பிறகு இப்பணியை, என்மகன்கள் மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்