ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே காஷ்மீரில் நடக்கிறது – சீமான்
27 Sep,2019
ஈழத்தில் அன்று என்ன நடந்ததோ அது இன்று காஷ்மீரில் இடம்பெற்றுவருகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் டெல்லியில் பேரணியொன்று இடம்பெற்றுவருகின்றது
குறித்த பேரணியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “வலிதாங்கிய மக்கள் நாம் என்றும் எங்களால் தான் பிறிதொரு தேசிய இனத்தின் வலியை உணரமுடியும்.
எந்தவொரு முடிவை எடுக்க வேண்டுமானாலும் காஷ்மீர் மக்களின் முடிவினை கேட்டப்பின்பே எடுக்க வேண்டும்.
ஆனால் இன்று மக்களின் விருப்பத்தை கேட்காமல், அந்த மாநிலத்தின் ஜனநாயக தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, இராணுவத்தினரை குவித்து வைத்து அம்மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என கூறுவது வேடிக்கையானது.
இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.