பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவு!
27 Sep,2019
ஆளில்லாத 8 விமானங்கள் மூலமாக இந்தியாவுக்குள் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஏகே47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக பஞ்சாப் அரசு எச்சரித்துள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானில் இருந்து எல்லைதாண்டி வரும் ஆளில்லாத விமானங்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் கிளேர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லாத குட்டி விமானங்களை கண்காணிப்பதற்கான எந்தவித வசதி வாய்ப்பும் இல்லை என்றும் கூறும் ராணுவத்தினர், அதே நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம் என்றும தெரிவித்துள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படையின் உயரதிகாரியான விவேக் ஜோஹ்ரி, இப்பிரச்சினையை கண்காணிக்க பஞ்சாப் சென்றுள்ளார். இந்திய எல்லைக்குள் ஆளில்லாத விமானங்கள் ஊடுருவி வந்த நேரத்தில் எல்லைப்பகுதியில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்