திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.
11 Sep,2018
விழுப்புரம் திருக்கோவிலுர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து தாய் தனலட்சுமி உட்பட 4 பேர் பலியாகினர். தீ பிடித்ததில் மகன்களான 9 மாத குழந்தை ருத்ரன், விஷ்னு பிரியன்(வயது 4), கமலேஷ்வரன் (வயது 7) உயிரிழந்தனர்.
தனலட்சுமி குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.