சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று! ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் இல.கணேசன்

09 Oct,2014
 

             



நேற்று வியாழக்கிழமை ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டதால், ஜெயலலிதா சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றில் ஜாமீன் கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

முதலில் ஜெயலலிதா மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வக்கீல் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதலமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை.

தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனிக்கோர்ட்டு தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் என்னுடைய ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்திருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல, சாதாரண தண்டனைதான். இதற்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது.

எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தனது ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.


ஜெயலலிதாவின் மேல்முறையீடுகளை தயாரிக்க 3 மாதங்கள் ஆகுமா? பரபரப்பு தகவல்

ஜெயலலிதா சொத்து குவிப்பு மீதான மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதற்கு அதிமுகவின் வழக்கறிஞர்கள் குழுவே காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிட்டு வழங்குவதற்கு.

அந்த பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும்.

மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் மேல்முறையீட்டு சட்ட நடவடிக்கைள் முடிய 2 ஆண்டுகள் வரை ஆகும்.

மேலும், இந்த விடயம் ஜெயலலிதாவின் சட்டக்குழுவுக்கு இது தெரியவில்லையா அல்லது காலதாமதம் ஆகும் என்று ஜெயலலுதாவிடம் தெரிவிக்க பயப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 


தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் இல.கணேசன் பேட்டி
        


அரசியல் பிரவேசம் குறித்து கேட்டு ரஜினிகாந்தை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பா.ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழுவின் உறுப்பினருமான இல.கணேசன் ஈரோடு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனித்தன்மை

 பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்ற பின்னர் ஏராளமான சாதனைகளை செய்து உள்ளார். குறிப்பாக பிற பிரதமர்களை விட 2 விஷயங்களில் நரேந்திர மோடி தனித்தன்மையுடன் வேறுபட்டு நிற்கிறார். முதலாவது உலக நாடுகள் மத்தியில் பாரத நாட்டின் மரியாதை உயர்ந்து உள்ளது.

ஒரு பிரதமர் என்பவர் அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகள், சக அமைச்சர்களுடனான சம்பிரதாய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வது என்று அல்லாமல் ஒட்டுமொத்த மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பிரதமராக உள்ளார்.

குற்றத்தின் தன்மையில் தீர்ப்பு

 பிரபலமான நடிகர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தார். அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டபோது, அவரது குற்றம் மறைக்கப்பட்டு அவர் ஜெயிலுக்கு செல்லக்கூடாது என்று போராட்டம் நடந்தது. ஆனால் நீதிபதி என்பவர் குற்றம் செய்த நபர் யார் என்பது பற்றி பார்ப்பது இல்லை. குற்றத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்.

இதுபோலவே ஜெயலலிதாவை பொறுத்தவரை குற்றம்சாட்டப்பட்ட வழக்கு 18 ஆண்டுகள் நடந்தன. அவர் குற்றவாளி என்று நிரூபிக்க 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் இந்த காலத்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் நீதிபதி தன்முன்னால் இருக்கிற குற்றத்தின் தன்மையை பொறுத்து தண்டனை வழங்கி இருக்கிறார்.

தீர்ப்பு சரியில்லை என்று கருதினால் இதை கூறும் ஒரே இடம் கோர்ட்டுதான். வக்கீல்கள் தங்கள் வாதத்திறமையால், கூடுதல் ஆதாரங்களை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய வேண்டும்.

பகிரங்க வருத்தம்

 அ.தி.மு.க.வுக்கு பரிகாரம் வேண்டும் என்றால் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். மணல் விற்பனை முறைகேடுகள் களையப்பட வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

காளையார் கோவில் கோபுரத்தில் தீப்பற்றிய சம்பவம் பக்தர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். கோவில் திருப்பணியை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த்

 நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர். ஆத்மார்த்தமான தேசிய எண்ணம் கொண்டவர். எங்கள் கட்சி தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோருடனும் நல்ல நட்புடன் இருந்தவர். யூகத்தின் பேரில் அவர் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற கேள்விகளால் அவரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இல்லை. அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை.

இவ்வாறு தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.




Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies