சிறையில்ஏதாவது நேர்ந்தால் இரத்தக்களரிற்படும் தீக்குளித்தும் மாரடைப்பாலும் 62 பேர் பலி ரத்தக் கையெழுத்து

05 Oct,2014
 

             



வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததான ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் இருக்கும் சிறைக்கு மாற்றவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா பாண்டியன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அங்கே ஏதாவது சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அதன்விளைவாக ஏற்கெனவே காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கடந்தகால கசப்பு மேலும் அதிகரித்து விரும்பத்தகாத விபரீதங்கள் நேரும் என்பதாலேயே தாம் இந்த கோரிக்கையை வைப்பதாக தா பாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இப்படி ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றுவதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, அதன் மீதான மேல்முறையீடோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என்று கைதுசெய்யப்பட்டிருக்கும் பலர், பல ஆண்டுகாலம் கர்நாடக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பாக இத்தகைய கோரிக்கைகளை வைக்காமல், ஜெயலலிதாவுக்கு மட்டும் இத்தகைய சலுகையை கேட்பது, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு அளவுகோல், அரசியல் செல்வாக்கில்லாத ஏழைகளுக்கு ஒரு அளவுகோல் என்கிற இரட்டை அளவுகோலாக விமர்சிக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, இத்தைய ஒப்பீடே அடிப்படையில் தவறானது, பொருத்தமற்றது என்று நிராகரித்தார் தா பாண்டியன்.

வீரப்பனின் கூட்டாளிகள் என்று தண்டிக்கப்பட்டு கர்நாடக சிறையில் இருப்பவர்கள் கொலைக்குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் ஜெயலலிதாவை அவர்களுடன் ஒப்பிடமுடியாது என்றும் கூறினார் தா பாண்டியன்.

தமிழக மக்களின் அன்பைப்பெற்று தமிழக மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா என்றும் அவருக்கு கர்நாடக சிறையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அது அரசியல் விபத்தாக மாறிவிடும் என்றும் இருமாநில மக்களுக்கு இடையிலும் அதனால் ரத்தக்களரி ஏற்படும் என்றும் தா பாண்டியன் அச்சம் வெளியிட்டார்.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு கர்நாடக சிறைகளில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதனால் எந்தத்தகராறும் எழாது என்றும் விளக்கமளித்தார் தா பாண்டியன்

ஜெயலலிதா கைது!- தீக்குளித்தும், மாரடைப்பாலும் இதுவரை 62 பேர் பலி!


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் அதிர்ச்சியடைந்தும், உடனடியாக அவரை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தார்கள்.

மேலும், சிலர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவிகளும் அடக்கம் என்பது தான் கூடுதல் வேதனை தரும் விசயம்.

இந்நிலையில், இவ்வாறு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜெயலலிதா விடுதலைக்காக ரத்தக் கையெழுத்து

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ரத்தக் கையெழுத்து, தீச்சட்டி என கடவுளை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி அதிமுகவினர் ஒருபுறம் போராட்டமும், மறுபுறம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரத்தக் கையெழுத்து இயக்கம்

ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி மேற்கு மாம்பலத்தில் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

2500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தங்கள் ரத்தத்தினால் கையெழுத்துப்போட்டு குடியரசுத்தலைவருக்கும்,ஆளுநருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

பிள்ளையாருக்கு யாகம்

கழக இலக்கிய அணி சார்பில் அரசினர் தோட்டத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

108 யாகப் பொருட்களை அக்னியில் போட்டு வேத விற்பன்னர்கள் யாக வேள்வியை நடத்தினார்கள். இதில் அமைச்சர் பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

500 தொண்டர்கள் தீச்சட்டி

இன்று அதிகாலை 4 மணியளவில் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி தீச்சட்டி ஏந்தினார். அவருடன் 500 தொண்டர்களும் தீச்சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

ஜெயலலிதா பேரில் அர்ச்சனை

அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்து உடனடியாக விடுதலை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர் விருகை ரவி, கவுன்சிலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

108 குத்துவிளக்கு பூஜை அதை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்கள். 1008 கலச பூஜை மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் 1008 கலசபூஜையும், யாக வேள்வியும் நடத்தப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு 1008 கலசங்களில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 




Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies