சச்சின், கமல் ஹாசன், பிரியங்காவிற்கு பிரதமர் மோடி அழைப்பு காவல் நிலையத்தில் பிரதமர் மோடி திடீர் சோதனை

02 Oct,2014
 

          

    
         சுத்தமான இந்தியா’ காவல் நிலையத்தில் பிரதமர் மோடி திடீர் சோதனை


டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் மத்திய டெல்லியில் உள்ள காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்து ஆச்சரியப்படுத்தினார்.
  
டெல்லியில் வால்மீகி காலனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென மந்திர் மார்க் போலீஸ் நிலையத்திற்கு அருகே சென்ற போது காரை நிறுத்த உத்தரவிட்டார். அப்போது காவல் நிலையம் எவ்வளவு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது என்று நேரில் பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி திட்டமிடப்படாமல் காவல் நிலையத்திற்கு தீடீரென வந்ததால் அதிகாரிகள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர். மந்திர் மார்க் காவல் நிலையத்தில் சிறிது நேரம் செலவழித்த பிரதமர் மோடி காவல் நிலையத்தின் சுத்தத்தை பார்வையிட்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்து போலீசாரிடம் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக பேசினார்.

பின்னர் டெல்லி வால்மீகி பஸ்தியில் பிரதமர் மோடி ‘சுத்தமான இந்தியா’   திட்டத்தை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தங்கிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இந்த அமைப்பில் இணைய 9 பேருக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். இந்த 9 பேரும் இயக்கத்தில் இணைய மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.

‘சுத்தமான இந்தியா’  திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இது மந்திரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை.

இது பொதுமக்களுடைய பொறுப்பும் கூட. இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நாடு முழுவதும் வெற்றி கண்டது. அதேபோல் இந்தியாவை சுத்தம் செய்வோம் என்று இயக்கத்தில் 125 கோடி மக்களும் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளை நம்புங்கள். சமூக வலைதள பக்கத்தில் ‘சுத்தமான இந்தியா’  இயக்க பிரச்சாரத்திற்கான உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதியளிக்க வேண்டும். நாம் வெளிநாடு செல்லும் போது அந்த நாடுகள் எப்படி சுத்தமாக இருக்கிறது என்று பார்க்கிறோம், மக்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை நாம் அங்கு பார்க்கவில்லை. எனவே தான் அங்கு சுத்தமாக உள்ளது. என்றார்.

நிகழ்ச்சியில் சுத்தமான இந்தியாவை உருவக்குவோம் என்ற உறுதிமொழியை பிரதமர் மோடி வாசிக்க, மாணவர்கள், அமைச்சர்கள் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


அ.தி.மு.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம்


ஜெயலலிதாவுக்கு நீதி கோரி டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நீதிகோரி டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலையின் முன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



காலை 10 மணிக்கு எம்.பி.க்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இன்று மாலை 5 மணிவரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் பேசுகையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை தாமதப்படுத்துவது ஏன்?. சட்டத்தின்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார். எங்களது தலைவருக்கு ஜாமீன் கொடுக்க காலதாமதம் செய்யப்படுவதில் நாட்டின் கவனத்தை திருப்பவே உண்ணாவிரதத்தின் நோக்கம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்களின் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies