ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி மாணவர்கள் அ.தி.மு.க.வினர் மீனவர்கள் நடிகர்கள் டைரக்டர்கள் ஆர்ப்பாட்டம்

30 Sep,2014
 

             


ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, சென்னையில் உள்ள மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நேற்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி சார்பில் மாணவர் பேரவை மற்றும் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார்-மாணவர்கள் தள்ளு முள்ளு

காலை முதலே வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். ஜெயலலிதா மீது பொய் வழக்கு வழங்கப்பட்டதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கல்லூரியின் நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து மாநில கல்லூரி மாணவர் பேரவை தலைவர் அன்பரசு கூறும்போது, ‘கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ஜெயலலிதா. முதலில் 69 கலைக்கல்லூரிகள் தான் இருந்தன. ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு 83 கலைக்கல்லூரிகளாக உயர்ந்தன. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்.

சென்னை மாநகராட்சி

இதே போல், சென்னை மாநகராட்சி பின்புறம் நுழைவு வாயில் அருகே சென்னை மாநகராட்சி அண்ணா பொதுப்பணியாளர் சங்கம் சார்பில், ஜெயலலிதா தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அண்ணா பொதுப்பணியாளர் சங்க தலைவர் ஏ.டி.மோகன்பாபு தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சென்னை புறநகரில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி ஆலந்தூர் ஆசர்கானா கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

போராட்டத்திற்கு வி.என்.பி.வெங்கட்ராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.புருஷோத்தமன், என்.தனசேகரன், பி.சிவராஜ், வரதராஜன், லட்சுமிபதி, வைரமுத்து, ஜி.பி.குணா, உமர்கத்தா, முத்தையன் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மணப்பாக்கம் பாண்டியன், எம்.ஆர்.நரேஷ்குமார், சீ.வேம்பரசன், வி.கோபாலகிருஷ்ணன், ஹேமாபரணிபிரசாத், நந்தம்பாக்கம் ராஜசேகர், முகலிவாக்கம் கோவிந்தராஜ், முவரசம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம், பட்ரோடு தேன்ராஜா, வி.என்.பி.வெங்கட்ராமன் குடும்பத்தினர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வக்கீல்கள் மறியல்

ஆலந்தூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தகுமாரன் தலைமையில் வக்கீல்கள் ஜெயமாலினி, சக்தி உள்பட 25–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென பரங்கிமலை ஜி.எஸ்.டி.சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வந்து பேசினார்கள். இதையடுத்து வக்கீல்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உருவபொம்மை எரிப்பு

உள்ளகரம்–புழுதிவாக்கம் நகர அ.தி.மு.க சார்பில் சுப்பிரமணியசாமி, கருணாநிதியின் உருவபொம்மைகளை மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், ஜெ.கே.மணிகண்டன் தலைமையில் பெருங்குடி மண்டல அலுவலகத்தின் முன் கொளுத்தினார்கள்.

இதேபோல், சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க வக்கீல் பிரிவு துணை தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் 20 வக்கீல்கள் ஊர்வலமாக வந்து ராஜ்பவன் செல்லும் சாலையில் சுப்பிரமணியசாமி கொடும்பாவியை எரித்தனர். அப்போது ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பூர், திருவொற்றியூர்

பெரம்பூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் மூலக்கடையில் உண்ணாவிரதப்போராட்டம நேற்று நடைபெற்றது. பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச்செயலாளரும், எம்.பி.யுமான வெங்கடேஷ்பாபு, கழக அவைத்தலைவர் மதுசூதனன், மூலக்கடை பாகச் செயலாளர் சக்தி, முன்னாள் கவுன்சிலர் ஜம்புலிவடிவேலு மற்றும் 200–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 600 பேர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமலும், பெண்கள் மீன் விற்பனை செய்ய செல்லாமலும் எண்ணூர் விரைவு சாலையில் கடல் ஓரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதில் கிராமதலைவர் தேசிங்கு.கே.குப்பன், செயலாளர் கந்தன், வக்கீல் ஜெயக்குமார், பவர்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி காசிமேட்டில் மீனவர்கள் வேலைநிறுத்தம்


காசிமேட்டில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நேற்று காலை அகில இந்திய பாரம்பரிய மீனவ சங்கம், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், நாட்டுப்படகு உரிமையாளர்கள் சங்கம், கில்நட் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காசிமேடு மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், பைபர் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் மிகக்குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையோர பகுதியில் அனைத்து மீன்வியாபாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வடசென்னை பகுதியில் நேற்று முழுவதும் மீன் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.
உண்ணாவிரதம்

இதேபோல் வடசென்னை மீனவர் கிராம மக்கள் ஐக்கிய சபை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் 200–க்கும் மேற்பட்டோர் காசிமேடு எண்ணூர் நெடுஞ்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம் எம்.சி ரோட்டில் வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கழக அவைத்தலைவர் மதுசூதனன், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உட்பட 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தலைமையில் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், 4–வது மண்டல குழு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 300–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திரு.வி.க. நகர் தொகுதியில் நீலகண்டன் எம்.எல்.ஏ. தலைமையிலும், வடசென்னை தெற்கு மாவட்ட துறைமுக தொகுதி சார்பில் தங்கசாலை பகுதியில் கவுன்சிலர் பிரதாப்குமார் தலைமையிலும் போராட்டம் நடந்தது. இதில் வடசென்னை தெற்கு மாவட்டச் பொருளாளர் கிரிநாத், முன்னாள் பகுதி செயலாளர் இ.பி.பாண்டியன் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலாங்கரையில் மீனவர்கள் கடற்கரையில் ஆர்ப்பாட்டம்


சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்ன நீலாங்கரை குப்பம், பெரிய நீலாங்கரை குப்பம் ஆகியவற்றில் உள்ள 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என கூறி மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நீலாங்கரை முனுசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர், கடற்கரை பகுதியில் படகுகளை நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடிகர்கள், டைரக்டர்கள் உண்ணாவிரதம்: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம்


ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் படஅதிபர்கள் சென்னையில் மவுன உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழ் திரையுலகினர் நேற்று மவுன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.

வெல்வார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம்.

ஜெயலலிதா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றிபெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார்.

சரத்குமார்-விக்ரம்

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜீவா, பரத், விமல், விதார்த், சூரி, மதன்பாப், பாக்யராஜ், பிரபு, சத்யராஜ், விஜயகுமார், சேரன், ஆனந்தராஜ், விவேக், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், சிபிராஜ், ரமேஷ்கண்ணா, நரேன், நிழல்கள் ரவி, அஜய்ரத்னம், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், மயில்சாமி, உதயா, வையாபுரி, சரவணன், குண்டு கல்யாணம், மனோ பாலா, கும்கி அஸ்வின், நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, பபிதா, குட்டி பத்மினி, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு, வடிவுக்கரசி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் ஏ.எஸ்.பிரகாசம், எஸ்.ஏ.சந்திரசேகரன், முக்தா சீனிவாசன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, எழில், பவித்ரன், ரவி மரியா, வி.சேகர், லிங்கம்புலி, ஆர்.கண்ணன், ரவி கே.சந்திரன், செல்வபாரதி, எல்ரட் குமார், ஆதிராம்,

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள் கேயார், சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், ஞானவேல் ராஜா, காஜா மைதீன், இப்ராகிம்ராவுத்தர், தேனப்பன், எச்.முரளி, புஷ்பா கந்தசாமி, சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், முரளிதரன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, சி.பி.குமார், எஸ்கேப் மதன், அன்பாலயா பிரபாகரன், காட்கட்ட பிரசாத், கல்யாண், பெப்சி விஜயன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, கலைப்புலி சேகரன், எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், சுந்தர்ராஜன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கமலா தியேட்டர் உரிமையாளர் சி.த.வள்ளியப்பன், இசையமைப்பாளர்கள் தேவா, சங்கர் கணேஷ், தஷி, கவிஞர் சினேகன், விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது. இறுதியில், மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு

உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் பி.எம்.ஜி.ரெத்தினசாமி, கஜேந்திரன், ஆர்.மனோகரன், தினேஷ், கருணாகரன், சுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்

உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது.

திரையங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் நேற்று 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை இன்று (புதன்கிழமை) மாற்றிக்கொள்ளலாம். அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

நடிகர்கள்-டைரக்டர்கள்...

சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், ஞானவேல் ராஜா, காஜா மைதீன், இப்ராகிம்ராவுத்தர், தேனப்பன், எச்.முரளி, புஷ்பா கந்தசாமி, சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், முரளிதரன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, சி.பி.குமார், எஸ்கேப் மதன், அன்பாலயா பிரபாகரன், காட்கட்ட பிரசாத், கல்யாண், பெப்சி விஜயன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, கலைப்புலி சேகரன், எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், சுந்தர்ராஜன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கமலா தியேட்டர் உரிமையாளர் சி.த.வள்ளியப்பன், இசையமைப்பாளர்கள் தேவா, சங்கர் கணேஷ், தஷி, கவிஞர் சினேகன், விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது. இறுதியில், மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு

உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் பி.எம்.ஜி.ரெத்தினசாமி, கஜேந்திரன், ஆர்.மனோகரன், தினேஷ், கருணாகரன், சுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்

உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது.

திரையங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் நேற்று 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை இன்று (புதன்கிழமை) மாற்றிக் கொள்ளலாம். அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies