ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை ஒருவாரம் ஒத்திவைப்பு மதுரை பள்ளி மாணவி உயிரிழப்பு

30 Sep,2014
 

             

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி சார் பிலும் தனித்தனியே ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.இவர்கள் சார்பில் வக்கீல் கள் வேணுகோப£ல், அம்ஜத் ப£ஷா, செந்தில், பன்னீர் செல்வம், சீனிவாசன், திவாகர், மூர்த்திராவ், அன்புக் கரசு, அசோகன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட் டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

செப்டம்பர் 29-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை கர்நாடக ஐகோர்ட் டுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை கால அமர்வு முன் இன்று காலை 11 மணிக்கு நீதிபதி ரத்னகலா முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜரா னார். சசிகலாவுக் காக பிரபல மும்பை வக்கீல் அமீத்தேசாய் ஆஜரானார்.

ஜாமீன் மனு விசாரணை யின் போது அரசு தரப்பு வக்கீல் பவானி சிங்கும் ஆஜராகப் போவதாக தெரி வித்து இருந்தார். அதன்படி அவரும்  இன்று ஆஜரானார்.
இந்த வழக்கில், தான் ஆஜராக இருப்பதால் அதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பு ஆணை இன்னும் வரவில்லை. அதுவரை வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று பவானி சிங் வாதாடினார்.

இதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு வக்கீலுக்கு முறை யான அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றனர். ஆனால் பவானி சிங், இன்னும் கர்நாடக அரசின் அறிவிப்பு ஆணைதன் கைக்கு கிடைக்க வில்லை என்று தெரிவித் தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்தி வைத்து நீதிபதி ரத்ன கலா உத்தரவிட்டார். இதில் கர்நாடக அரசு பதில் அளிக்கு மாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டுமானால் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட்டு ஐகோர்ட்டு பதிவாளரை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தீர்ப்பை கேட்பதற்காக ஏராளமான அ.தி.மு.க. வக்கீல்களும், நிர்வாகிகளும் கர்நாடக ஐகோர்ட்டு முன் கூடியிருந்தனர். விசாரணை நடைபெற்ற கோர்ட்டு அறை சிறியது என்பதால் நீதிபதி மற்றும் வக்கீல்கள் மட்டுமே உள்ளே இருந்தனர். மனு ஒத்திவைக்கப் பட்டதை அறிந்ததும் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

சிறிது நேரத்துக்குப் பின் அரசு வக்கீல் பவானி சிங் கோர்ட்டில் இருந்து வெளியே வந்து ஜாமீன் மனு மீதான விசாரணை 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கும் விவரத்தை நிருபர்களிடம் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, விசாரணை தள்ளி வைக்கப்பட்டதும் காரில் ஏறிச்சென்று விட்டார். கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கர்நாடகத்தில் விடுமுறை கால நீதிமன்றம் இனி அடுத்து வியாழக்கிழமைதான் கூடும். அதற்குள் தலைமை நீதிபதியை அணுகி முன் கூட்டியே ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறுவதற்கான முயற்சியில் ஜெயலலிதா வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோர்ட்டு வளாகத்திலேயே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பின்னர் அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சந்தித்து ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று முறையீடு செய்கிறார்கள்.

அவர் அனுமதி அளித்தால் ஜெயலலிதா வக்கீல்கள் பதிவாளரை அணுகி மனு மீதான விசாரணையை முன்கூட்டியே நடத்துமாறு கோருவார்கள். கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தர விட்டால் முன்கூட்டி விசாரணை நடைபெறலாம். இன்று மாலையே கூட விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

அதே சமயம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடவும் செய்யலாம். இதிலும் நடைமுறை சிக்கல் உள்ளது. மனு மீது தீர்ப்பு வழங்கப் பட்டால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய முடியும். விசாரணை தள்ளி வைக்கப் பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய இயலாது என்பதால் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெ£றுத்துதான் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.  இல்லையெனில் இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண் டும். அதுவரை ஜெயலலிதா மேலும் ஒரு வாரம் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.


ஜெயலலிதாவுக்கு சிறை; தீக்குளித்த மதுரை பள்ளி மாணவி உயிரிழப்பு


ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்து தீ குளித்த மதுரை பள்ளி மாணவி உயிரிழந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை மருத்துவமனையில் 80 சதவீதம் எரிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி நாகலட்சுமி, ஜெயலலிதா அரசு அறிமுகம் செய்த இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர். இந்நிலையில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதில் மனவேதனை அடைந்து தீ குளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies