தமிழகத்தில் மேலும் 5 உளவாளிகள் ஊடுருவல்: அதிர்ச்சி தகவல்கள்

12 Sep,2014
 

             

தமிழகத்தில் மேலும் 5 பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களையும் பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது.

தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள்

உளவாளி அருண்செல்வராசனை விசாரித்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் ஆகியோரிடமும் நான் விசாரணை நடத்தி இருக்கிறேன். தற்போது பிடிபட்டுள்ள அருண்செல்வராசனிடமும் நான் விசாரணை நடத்தினேன். தமீம் அன்சாரி மிகவும் அழுத்தமானவர். அவரிடம் தகவல்களை பெற சிரமம் ஏற்பட்டது.

ஆனால் ஜாகீர் உசேனும், அருண்செல்வராசனும் சிரமம் இல்லாமல் தகவல்களை சொன்னார்கள். ஜாகீர் உசேன் இலங்கையில் கண்டியில் பிறந்தவர். 10-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். திருமணம் ஆனவர். அவர் துணி வியாபாரி போல, தமிழகத்திற்குள் நுழைந்திருக்கிறார். அவர் கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டார்.

விமானம் ஓட்ட பயிற்சி

தற்போது பிடிபட்டுள்ள அருண்செல்வராசன் பட்டப்படிப்பு படித்துள்ளார். விமானம் ஓட்டவும் பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் இலங்கையில் கொழும்பில் பிறந்துள்ளார். திருமணம் ஆகாதவர். அவரது தந்தை கொழும்பில் நட்சத்திர ஓட்டல் நடத்தி உள்ளார்.

ஓட்டலில் நஷ்டம் ஏற்படவே, அருண்செல்வராசன் குடும்பம் சென்னை வந்துள்ளது. 8-வது வகுப்பில் இருந்து 10-வது வகுப்பு வரை அவர் சென்னையில் படித்துள்ளார். அதன்பிறகு மீண்டும் இலங்கை சென்று பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மீண்டும் தமிழகம் வந்துள்ள அருண் செல்வராசன், பாகிஸ்தான் உளவாளியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழகம் வந்துள்ள தகவலை, ஜாகீர் உசேன் மற்றும் தமீம் அன்சாரி மூலம், தெரிந்துகொண்டோம். அவரது செல்போன் நம்பரும் கிடைத்து விட்டது.

அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தோம். அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்திக்கொண்டே, உளவு பார்க்கும் தொழிலையும் செய்துள்ளார். அவர் நடத்திய ஐஸ்ஈவென்ட் நிறுவனம், நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டம்

அருண் செல்வராசனை, விமானியாக பயிற்சி பெற ஐ.எஸ்.ஐ. உளவு அதிகாரிகள்தான் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு செலவான தொகையும், பாகிஸ்தான் உளவு அமைப்பால் கொடுக்கப்பட்டுள்ளது. உளவு வேலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், விமானத்தை கடத்தி நாசவேலையில் ஈடுபடும் திட்டத்தை நிறைவேற்றவும், இவரை பயன்படுத்த, பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் அதுபோன்ற திட்டம் எதுவும் அருண்செல்வராசனிடம் அவர் பிடிபடும் வரை சொல்லப்படவில்லை.

அவர் தனது வங்கி பணப்பரிமாற்றங்கள் அத்தனையையும், உ.பி.மாநிலம் மொரதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம்தான் செய்துள்ளார். மேலும் 4 அல்லது 5 பேர் உளவு கும்பலைச் சேர்ந்தவர்களில் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்: தமிழகத்தில் 20 இடங்களை தகர்க்க சதி போலீஸ் தீவிர விசாரணை

தமிழகத்தில் புகுந்து நாசவேலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.

உளவாளிகள் கைது

ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம், தமிழகத்தில் உளவு பார்க்க அனுப்பிய உளவாளிகள் தொடர்ந்து கைதான வண்ணம் உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் தமீம் அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார்.

அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி, தனது கூட்டாளிகள் சிவபாலன், சலீம், ரபீக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.

இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளியை மலேசியாவில் கைது செய்தனர். அவரை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திடுக்கிடும் தகவல்

தற்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, இன்னொரு உளவாளி அருண்செல்வராசன் (வயது 29) என்பவரும், சென்னை சாலிகிராமத்தில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். இந்த பாகிஸ்தான் உளவாளிகளை, தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசியபுலனாய்வு படை போலீசாரும் இணைந்து வேட்டை நடத்தி பிடித்துள்ளனர்.

உளவாளி அருண்செல்வராசனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

பாகிஸ்தானின்சதிவேலை

கடல் வழியாக ஊடுருவி மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தினார்கள். அந்த தாக்குதல் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோத வைத்து நடத்திய தாக்குதலைப்போல, உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மும்பையை அடுத்து, சென்னையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையொட்டி தமிழக கடலோர பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

ஆனால் பாதுகாப்பு வளையத்தை மீறி பாகிஸ்தானின் சதி வேலைகள் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனது உளவாளிகளை தமிழகத்திற்குள், துணிச்சலாக ஊடுருவவிட்டுள்ளது. நல்லவேளையாக இந்த உளவு வேலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. 3 முக்கிய உளவாளிகள், தங்களது கூட்டாளிகள் 4 பேருடன் கைதாகி உள்ளனர்.

இலங்கையைதளமாக வைத்து...

தமிழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் இந்த உளவு வேலைக்கு தலைமை தாங்கி செயல்பட்டுள்ளனர்.

தமிழ் பேசக்கூடிய இலங்கையைச் சேர்ந்த இளம் வாலிபர்களை, தங்கள் உளவாளிகளாக தமிழகத்திற்குள் ஊடுருவ வைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்பு பணியாற்றிய இளைஞர்கள் சிலரையும் இதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

விடுதலைப்புலியா?

தற்போது கைது செய்யப்பட்டுள்ள, அருண்செல்வராசன், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர் அதை மறுத்துள்ளார். அருண்செல்வராசனிடம் அது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தி தகர்க்கலாம் என்ற பட்டியலை பாகிஸ்தான் உளவு அமைப்பு தயார்படுத்திவிட்டது. முதலில் தமிழகத்தின் ராணுவ நிலைகள், அருகில் உள்ள ஆந்திரா, கேரளாவில் உள்ள ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்துவது என்று திட்டமிட்டுள்ளனர்.

ரூ.50 கோடி

இந்த ராணுவ நிலைகளின் புகைப்படங்கள், எந்த வழியாக வந்து அவற்றின் மீது எப்படி தாக்குதல் நடத்துவது வசதியாக இருக்கும் என்பன போன்ற தகவல்களை வரை படம் மூலம் திரட்டி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருண்செல்வராசன், இணையதளம் வாயிலாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.

உளவாளிகளை தமிழகத்திற்கு அனுப்பி, இந்த உளவு வேலைக்கு பயன்படுத்திட மட்டும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ரூ.50 கோடி வரை செலவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

20 முக்கிய இடங்கள் தேர்வு

2-வது கட்டமாக தமிழகத்தின் பழங்கால கோவில்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள், சென்னையில் உள்ள தலைமைச்செயலகம், அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம், கல்பாக்கம் அணுமின்நிலையம், சென்டிரல் ரெயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்ற 20 இடங்கள் தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அடுத்த கட்டமாக, தாக்குதலை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இதற்குள் இந்த சதித்திட்டம் அம்பலமாகி, உளவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். உளவு வேலைக்கு தளபதியாக செயல்பட்ட, பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்கை, பணி மாறுதல் செய்து விட்டனர். அவரை பாகிஸ்தான் அரசு திரும்ப அழைத்துக்கொண்டது. இதனால் இந்த நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தயார்

தமிழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திட, 20 தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாகவும், தகவல்கள் வெளிவந்து உள்ளது. அந்த தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தாக்குதல் முயற்சிக்கு, ஓரளவு முட்டுக்கட்டை போட்டது போல ஆகிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து வேட்டை நடத்தி, இந்த தாக்குதல் முயற்சியை வேறோடு, வெட்டி சாய்க்க வேண்டும். அந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.





Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies