பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் உளவு பார்த்ததற்கு ரூ.2 கோடி வங்கி கணக்கு கண்டுபிடிப்பு

11 Sep,2014
 

             


பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண் செல்வராஜன், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 25–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்

 பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராஜன்(வயது 28) என்பவரை தேசிய புலனாய்வு போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். அவர் மீது அரசு ரகசியங்களை வெளியிடுதல், கஞ்சா வைத்திருத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அருண் செல்வராஜனை நேற்று மாலை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோனி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, அருண் செல்வராஜனை வருகிற 25–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேசிய புலனாய்வு போலீசார் அருண் செல்வராஜனை புழல் சிறையில் அடைக்கச் அழைத்து சென்றனர்.

ரூ.7 ஆயிரம் வாடகை

 கைதான அருண் செல்வராஜன், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராதபடி விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து வந்து உள்ளார். இவரை பார்ப்பதற்கு அடிக்கடி வாலிபர்கள் 4 பேர் கொண்ட குழுவாக வந்து சென்றனர்.

மேலும் அவர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜனை அவர் தங்கி இருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று போலீசார் சோதனை செய்தபோதுதான் அவர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்ற விவரம் தெரிந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அருண் செல்ராஜனுக்கு மிகவும் நெருக்கமானவர்களே இந்த வீட்டை அவருக்கு வாடகைக்கு எடுத்து கொடுத்து உள்ளனர் என்று கூறப்படுகிறது


உளவு பார்த்ததற்கு ரூ.2 கோடி கூலி வங்கி கணக்கு மூலம் கண்டுபிடிப்பு
        


சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன், இலங்கையில் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கொழும்பில் ஓட்டல் தொழில் செய்தார். ஆனால் ஓட்டல் தொழில் லாபத்தை தரவில்லை. இலங்கையில் போர் மூண்டபோது, அருண்செல்வராசன், தனது பெற்றோருடன், சென்னை வந்து தங்கினார். 8–வது வகுப்பு முதல் 10–வது வகுப்பு வரை சென்னையில் படித்துள்ளார். 2008–ம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்று அங்கு படித்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலும், இவர் ஒரு அலுவலகத்தை நடத்தி வந்தார்.

இவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்தன. இவரது வங்கி கணக்கில் ரூ.2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம், என்று கருதப்படுகிறது. ஏற்னவே கைது செய்யப்பட்ட உளவாளிகள் தமீம்அன்சாரி, ஜாகீர்உசேன் ஆகியோருடன் செல்போனில் பேசி இருக்கிறார். இவரை கடந்த ஒரு மாதமாக செல்போன் பேச்சை கண்காணித்து, பிடித்தோம், என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்


அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கையரின் உளவுத்தகவலின் அடிப்படையில், இந்திய தேசிய புலனாய்வு சேவையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

அருண் செல்வராஜா என்ற இலங்கையர் பாகிஸ்தானுக்காக தென்னிந்தியாவில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது அவர் பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஸ்கைப் மூலம் தென்னிந்தியாவை பற்றிய உளவுத்தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்ததாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இலங்கையர் காணொளி வடிவிலான தகவல்களை பரிமாறியமை காரணமாக, தென்னிந்தியாவில் பாகிஸ்தானிய உளவுப்பிரிவினர் 26.11 இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு ஒப்பான தாக்குதல் ஒன்றை திட்டமிட்டிருக்கலாம் என்று இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.




Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies