காஷ்மீரில் 9 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர் 108 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு மோடி ஆலோசனை

07 Sep,2014
 

              


        

காஷ்மீரில் மீட்பு பணியின்போது, 9 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
வரலாறு காணாத வெள்ளம்
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை, இப்போது காஷ்மீரில் நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பர்ஜூல்லா, பெமினா பகுதிகளில் 2 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.
படகு கவிழ்ந்தது
வெள்ளத்தில் தவிப்பவர்களை மீட்பதற்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு புலவாமா மாவட்டத்தில், பாம்போரே பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஒரு படகில் ராணுவ வீரர்கள் ஜீலம் நதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளத்தின் தீவிர போக்கால் அந்த படகு கவிழ்ந்து விட்டது.
9 பேர் அடித்துச்செல்லப்பட்டனர்
அவர்களில் 11 பேர் பத்திரமாக நீந்தி கரையேறினர்.

9 வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அவற்றை இயக்க முடியாமல் போனதையடுத்து, மீட்பு பணியில் படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 7 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 2 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆயிரம் பேரை அவர்கள் மீட்டுள்ளனர். அவர்களுக்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
தேசிய பேரிடர்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். காஷ்மீர் மழை வெள்ளத்தினால் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வெள்ளத்தில் சிக்கி தவிக்கிற மக்களை மீட்பதற்கு விமான படையினரையும் ஈடுபடுத்த வேண்டும், நிவாரண பணிக்கு கூடுதல் நிதியையும் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நெருக்கடியான இந்த தருணத்தில் காஷ்மீர் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

காஷ்மீரில் வெள்ளம்: 108 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
        


காஷ்மீரில் பலத்த மழை பெய்து வருவதால், ஜம்மு பிராந்தியத்தில் இந்திய–பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய புறக்காவல் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள ராணுவ வீரர்களும், எல்லை பாதுகாப்பு படையினரும் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 108 வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுபோல், பொதுமக்களில் 564 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
 
காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 160 பேர் பலியாகி விட்டனர். வெள்ளச் சேதங்களை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் செல்கிறார். விமானத்தில் பறந்தபடி அவர், வெள்ளச்சேதங்களை பார்வையிடுகிறார். மழைக்கு பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கி ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பயப்பட தேவையில்லை உமர் அப்துல்லா; வெள்ளம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
        


வெள்ளம் பாதிக்கப்பட பகுதியில் உள்ள மக்கள் பயப்பட தேவையில்லை என்று காஷ்மீர் மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை, இப்போது காஷ்மீரில் நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பர்ஜூல்லா, பெமினா பகுதிகளில் 2 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. வெள்ளத்தில் தவிப்பவர்களை மீட்பதற்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு புலவாமா மாவட்டத்தில், பாம்போரே பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஒரு படகில் ராணுவ வீரர்கள் ஜீலம் நதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளத்தின் தீவிர போக்கால் அந்த படகு கவிழ்ந்து விட்டது. காஷ்மீரில் மீட்பு பணியின்போது, 9 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளச் சேதங்களை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் விமானத்தில் பறந்தபடி வெள்ளச்சேதங்களை பார்வையிட
 பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார். ஜம்முவில் அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாதாக இது குறித்து பேசிய அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா, முன்பு எப்போது இல்லாத நிலைமையை இப்போது சந்தித்து உள்ளோம். இந்த சூழ்நிலையில் முடிந்தவரையில் மீட்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். மீட்பு குழுவினர் பாட்னா மற்றும் காசியாபாத்தில் இருந்து விரைந்துள்ளது. மீட்பு பணிகளுக்கு படகுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் பயப்படதேவையில்லை. ஜம்முவில் சிக்கியுள்ள மக்களை ராணுவ வீரர்கள் மீட்பார்கள். என்று கூறியுள்ளார். 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies