ஜப்பானில் இந்தியில் பேசிய நரேந்திர மோடி இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு செய்தித் துளிகள்

01 Sep,2014
 

              


        


வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இந்தி மொழியில் பேசுவது என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார்.

ஜப்பானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு தான் கலந்து கொண்ட முக்கிய நிகழ்ச்சிகளில் இந்தியிலேயே பேசினார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் சேர்ந்து நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டி அளித்த போது இந்தியிலேயே பேசினார். அவர் பேசியது உடனுக்கு உடன் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து கூறப்பட்டது. முன்னதாக இந்திய–ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்திலும் நரேந்திர மோடி இந்தியிலேயே பேசினார்.


புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற நிதி உதவி இந்தியாவில் 5 ஆண்டுகளில் ஜப்பான் ரூ.2 லட்சம் கோடி முதலீடு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
        


இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை ஜப்பான் முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்து ஆயின.


டோக்கியோ,

5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார்.
டோக்கியோவில் நரேந்திர மோடி
முதல் 2 நாட்கள் ஜப்பானின் பழைய தலைநகரான கியோட்டோவில் அவர் தங்கி இருந்தார். முதல் நாளில், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரை கியோட்டோ போன்று நவீன நகராக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2–வது நாளான நேற்று முன்தினம் நரேந்திர மோடி, கியோட்டோ நகரில் உள்ள டோஜி புத்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். கியோட்டோ பல்கலைக்கழகத்துக்கும் சென்றார். பின்னர் அங்கிருந்து தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் ஆனார்.

சுற்றுப்பயணத்தின் 3–வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய–ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
பேச்சுவார்த்தை
அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பரஸ்பர பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது, சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், சென்னை–பெங்களூர் சரக்கு போக்குவரத்து சாலை திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வரவேற்பு தெரிவித்தனர்.
ரூ.2 லட்சம் கோடி முதலீடு
இந்த பேச்சுவார்த்தையின் போது, அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வகை செய்யும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.

இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், நவீன நகரங்களை அமைத்தல், போக்குவரத்து, கங்கை உள்ளிட்ட நதிகளை சீரமைப்பது, மாசற்ற எரிசக்தி, திறன்அபிவிருத்தி, உணவு பதப்படுத்துதல், கிராமப்புற மேம்பாடு, ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குதல், மகளிர் மேம்பாடு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
புல்லட் ரெயில்
போக்குவரத்து மேம்பாடு தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் விடுவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ஜப்பான் வழங்கும்.

சிவில் அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை. இந்த துறையில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்குமாறு தங்கள் அதிகாரிகளை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும் கடலோர பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நவீன விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டறிக்கை
பேச்சுவார்த்தை முடிந்ததும், கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அணுஆயுத பரவல் தடை மற்றும் அணுசக்தி பாதுகாப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பின்னர் இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:–
புதிய தொடக்கம்
என்னுடைய இந்த சுற்றுப்பயணம் இந்தியா–ஜப்பான் இடையேயான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு எல்லை என்பது கிடையாது. தெற்கு ஆசியாவுக்கு வெளியே நான் முதன் முதலாக ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளேன். இதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எனது தலைமையில் ஆட்சி அமைந்த 100 நாட்களில் நான் ஜப்பான் வந்திருப்பது, உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவும், ஜப்பானும் நீண்டகால நண்பர்கள். என்னுடைய இந்த பயணம் இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் ஆசியாவில் பொருளாதார வளம் மிக்க 3 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
ஒத்துழைப்பு அவசியம்
21–ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பதை உறுதிப்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒத்துழைத்து செயல்படுவது அவசியம் ஆகும். இந்தியாவின் முன்னேற்றத்தில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜப்பானின் முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். புல்லட் ரெயில் திட்டத்துக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியாவின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க ஒப்புதல் அளித்ததற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீடு இரு மடங்காக உயரும். அதாவது ரூ.2 லட்சத்து 10 கோடி அளவுக்கு ஜப்பான் முதலீடு செய்யும். வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவில் புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும் என்று நரேந்திர மோடியிடம் உறுதி அளித்து இருக்கிறேன்.

சிவில் அணுசக்தி துறை ஒத்துழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு ஷின்ஜோ அபே கூறினார்.


சீனா மீது நரேந்திர மோடி கடும் தாக்கு ‘‘ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்து கொள்கிறது’’
        

ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்துகொள்வதாக சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் 4 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லைப்பகுதி உள்ளது. எல்லைப்பகுதி தொடர்பாக தகராறு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் அவ்வப்போது சீன ராணுவம் ஊடுருவுகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேச மாநிலத்தையும் உரிமை கொண்டாடி இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிக்கிறது.

இதேபோல் ஒரு தீவு தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் தகராறு இருந்து வருகிறது. மேலும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதாக கருதப்படும் தென் சீன கடலில் குறிப்பிட்ட பகுதி தனக்கு தான் சொந்தம் என்று கூறுகிறது. புருனே, மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், தைவான் நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. இப்படியாக இந்தியாவுடன் மட்டுமின்றி பிற நாடுகளுடனும் சீனா ஆக்கிரமிப்பு மற்றும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
நரேந்திர மோடி கண்டனம்
இந்த நிலையில், 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:–

இந்த 21–ம் நூற்றாண்டு ஆசியா கண்டத்துக்கு உரியதாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால் இந்த 21–ம் நூற்றாண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி எனக்கு உள்ளது. இதற்கான விடையை நாம் தெரிவிக்க வேண்டும். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்தே இது அமையும்.
18–ம் நூற்றாண்டு சிந்தனை
நமக்கு முன்னேற்றம் வேண்டுமா? அல்லது தங்கள் நிலப்பரப்பை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய ஆக்கிரமிப்பு மனப்பான்மை வேண்டுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு மனப்பான்மை ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமையும் என்பதை அனைவரும் உணரவேண்டும். புத்தரின் பாதையில் செல்பவர்கள் அபிவிருத்தியின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் 18–ம் நூற்றாண்டு கால சிந்தனையில் இருப்பவர்கள் ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்து கொள்கிறார்கள். பிறருடைய கடல்பகுதியையும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

மனித குலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். இது இந்திய–ஜப்பான் அரசாங்கங்கள் மற்றும் தலைவர்களின் பொறுப்பு மட்டும் அல்ல. இரு நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.
தொழில் தொடங்க வாருங்கள்
இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமைந்து இருக்கிறது. 125 கோடி மக்களுக்கு தரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. கடந்த 100 நாட்கள் ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காக எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நல்லாட்சிக்கே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். குஜராத் மாநிலத்தில் நான் முதல்–மந்திரியாக இருந்திருப்பதால் தொழில்துறையினருடன் எனக்கு நீண்டகால தொடர்பு உண்டு. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீத வளர்ச்சியை நாங்கள் எட்டி இருக்கிறோம்.

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்தி, தொழில் துறையில் நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படும். எனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். குறிப்பாக அடிப்படை கட்டமைப்பு, மாசற்ற எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை தாமதம் இன்றி விரைவாக வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

ஜப்பானில் இருந்து தொழில் முதலீடுகளை பெறும் வகையில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
பள்ளிக்கூடம்
டோக்கியோ நகரில் உள்ள 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த தய்மே தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு நரேந்திர மோடி சென்றார். அங்கு குழந்தைகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அவர், அந்த பள்ளிக்கூடம் பற்றியும் அங்குள்ள கல்விமுறை பற்றியும் கேட்டு அறிந்தார். கடந்த 1923–ம் ஆண்டு செப்டம்பர் 1–ந் தேதி அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் இடிந்து நாசமானதாகவும், பின்னர் அது புதுப்பிக்கப்பட்டதாகவும் அப்போது அவரிடம் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், 2001–ம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பள்ளிக்கூடம் இடிந்து 400 குழந்தைகள் பலியானது பற்றி அப்போது குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய பேரழிவின் வலியை தான் உணர்வதாகவும் கூறினார்.

அங்கு பேசுகையில், 136 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் போல் தான் வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஜப்பானில் எந்த அளவுக்கு கல்வி முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. பள்ளிகளில் கல்வி நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவை கற்பிக்கப்படும் விதத்தை தெரிந்து கொள்ள வந்ததாகவும் கூறினார்.

அப்போது அதுபற்றிய விவரங்களை ஜப்பான் கல்வி துணை மந்திரி மேகாவா கெஹாய் அவரிடம் விளக்கி கூறினார்.
ஜப்பான் மொழி
இந்தியாவில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் ஜப்பான் மொழி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அந்த பாடத்தை சொல்லிக் கொடுக்க திறமையான போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதால் ஜப்பான் ஆசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வந்தாலும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் ஆன்–லைன் மூலம் வகுப்புகளை நடத்தும் யோசனையையும் அவர் தெரிவித்தார்.


இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு  .

 
 .

ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸா அபேயுடன், பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் முக்கியப்

பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகளிடையேயும், பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பானின் முன்னாள் தலைநகரான கியோட்டோவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் அவர் சுற்றுப்பயணம் செய்தார். மோடியின் வருகையையொட்டி, தலைநகர் டோக்கியோவில் இருந்த ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸா அபே, கியோட்டோவுக்கு வந்து அவரை நேரில் வரவேற்றார்.

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை, தலைநகர் டோக்கியோ அல்லாது பிற இடங்களில் இதுபோன்று அந்நாட்டுப் பிரதமர் சந்தித்துப் பேசுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்தியாவுடனான உறவுக்கு ஜப்பான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையே ஷின்ழ்ஸா அபே இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பின்னர் கியோட்டோ விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஷின்ழ்ஸா அபே முன்னிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியை திறன் வாய்ந்த நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து கியோட்டோ நகரில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தார். டோஜி, கிங்காகுஜி ஆகிய இடங்களில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த புத்தக் கோவில்களுக்கு சென்று மோடி வழிபாடு நடத்தினார். இதில் ஹிந்து மதத்தின் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட டோஜி கோவிலுக்கு முதலாவதாக மோடி சென்றார். அங்கு, மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸா அபேயும் வழிபாடு நடத்தினார். மோடியின் வருகையை அறிந்த ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் ஏராளமானோர், இந்திய தேசியக் கொடியுடன் வந்து அவரை வரவேற்றனர்.

கிங்காகுஜி புத்த கோவிலில் வழிபாடு நடத்திய மோடி, அங்குள்ள ஏரி, தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஜப்பானிய மக்களுடன் பரஸ்பரம் கைகுலுக்கியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அதனையடுத்து, கியோட்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார். அப்போது, இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களிடையே காணப்படும் ரத்த அணுக்கள் குறைபாடு தொடர்பான நோய் (சிக்கில் செல் அனிமியா) குறித்து எடுத்துரைத்து, அதற்கு தீர்வு காண ஜப்பான் உதவ வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.

அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மோடியிடம் ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். அதன்பின்னர் கியோட்டோ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, டோக்கியோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸா அபேயுடன் இருநாடுகளிடையேயான பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து திங்கள்கிழமை அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆக்கப்பூர்வ அணுசக்தி, உள்கட்டுமானம், அரிய வகை தாதுப் பொருள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகள் இடையேயும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸா அபே, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவும், ஜப்பானும் வரலாற்று ரீதியில் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொண்டவை. மோடியுடனான விருந்து நிகழ்ச்சி, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டோக்கியோவில் மீண்டும் அவரை திங்கள்கிழமை சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies