பெங்களூர்: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது மோசடி புகார்

28 Aug,2014
 

பெங்களூர்: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்திரி கவுடா பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கூறியிருப்பதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மைத்திரி கவுடா

மங்களூரை சேர்ந்தவர் மைத்திரி கவுடா (25). மாடலிங் துறையில் இருந்த இவர், கடந்தாண்டு கன்னட நடிகர் உபேந்திரா நடித்த டோபிவாலா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நேற்று அவர் பரபரப்பு குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த மே 8ம் தேதி மங்களூர் காப்பி ஷாப்பில் கார்த்திக் கவுடாவை சந்தித்தேன். குஷால் என்ற நண்பர்தான் கார்த்திகை அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து, இருவரும் போனில் பேசி கொண்டோம். அடிக்கடி வெளியே சந்தித்து கொண்டோம். அப்போது அவர் என்னுடன் உடல் ரீதியாக பழகுவதற்கு முயற்சித்தார். ஆனால், திருமணத்துக்கு பிறகே அதற்கு சம்மதிப்பேன் என்றேன்.

புகைப்படங்கள்இதையடுத்து, ஜூன் 5¢ம் தேதி மங்களூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று என்னை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வந்தோம். 4, 5 முறை மட்டுமே நேரில் சந்தித்து உடல் ரீதியாக இணைந்தோம்.

எனது பெற்றோர் சம்மதத்திற்கு பிறகு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். ஜூலை 18ம் தேதிக்கு பின்னர் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை.

நிச்சயம்

நேற்று காலை அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக தெரிய வந்தது. என்னை திருமணம் செய்து கொண்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.

எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.இவ்வாறு மைத்திரி கூறினார்.

இந்த குற்றச்சாட்டை சதானந்த கவுடாவும், மகனும் மறுத்துள்ளனர். இது குறித்து சதானந்த கவுடா கூறுகையில், நாங்கள் கவுரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் மரியாதையை கெடுப்பதற்காக பெண் ஒருவர் மகன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்வேன் என்றார்.


கார்த்திக் கூறுகையில், மைத்திரியை மூன்று முறை சந்தித்துள்ளேன். ஆனால், அவரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

என்னுடைய தந்தை பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இதுபோன்று குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்றார்.இதற்கிடையில் கார்த்திக் மீது ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் நடிகை மைத்திரி பலாத்காரம் மற்றும் மோசடி புகார் அளித்தார். போலீசார் அவரது புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்என்.ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கார்த்திக் கைது செய்யப்படுவாரா என்பது உடனடியாக தெரியவில்லை. மத்திய அமைச்சர் மகன் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies