ஆளுநர் அமித் ஷாவுக்கு வேலை செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது –
08 May,2026
118 பேரை காட்டுங்கள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வரும் ஆளுநர் அர்லேக்கர், மத்திய அரசின் நெருக்குதலால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது. போதாக்குறைக்கு அர்லேக்கர் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டார். அதிமுக – திமுக இணைந்து வந்தால் தாம் பதவிப் பிரமாணம் செய்யத் தயார் என்று அவர் கூறியுள்ள விஷயம், தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும் டெல்லியில் இயங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அர்லேக்கர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அர்லேக்கர், தான் அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல உள்ளதாகக் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் அடுத்த கட்டம் என்பது என்ன? தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி. அதன் பின்னர் 6 மாதம் கழித்துப் புதிய தேர்தல். இதுதான் அடுத்த கட்டம். இது இவ்வாறு இருக்க அர்லேக்கர் மேலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். இதுதான் மிக மிக முக்கியமானது.தேர்தல் கவரேஜ்
அதாவது அர்லேக்கர் கருத்து என்னவென்றால், ஒரு வேளை தான் விஜய் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தால், விஜய் முதலமைச்சர் ஆகிவிடுவார். இதன் பின்னர் எம்.எல்.ஏ பேரம் பேசும் விஷயங்கள் நடக்கும் என்கிறார். இதனைத் தான் அனுமதிக்க முடியாதாம். ஆனால் தற்போது எம்.எல்.ஏ பேரம் நடக்க ஆரம்பித்துவிட்டது. விஜய்யின் TVK கட்சியில் இருக்கும் பல எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட திமுக மற்றும் அதிமுக முனைப்பு காட்ட ஆரம்பித்ததால் தான் விஜய் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர்களை முதலில் ரிசார்ட்டில் வைத்தார்.
இதனை அடுத்து நாங்களும் நேர்மையானவர்கள் எனக் காட்டவே, எடப்பாடியார் தனது உறுப்பினர்களைப் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் வைத்திருக்கிறார். அதாவது தற்போது தமிழ்நாட்டின் 220 சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள். விஜய் முதலமைச்சர் ஆனால், சட்டமன்றம் கூட வேண்டும். இந்த உறுப்பினர்கள் வெளியே வந்தாக வேண்டும். வெளியே வரும் பட்சத்தில் அவர்களில் சிலர் விஜய்யை ஆதரிக்கக் கூடும். அப்படி என்றால் விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அதனை ஆளுநர் விரும்பவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட் என்னும் சிறையில் இருக்கும் போதே எனக்கு 118 பேரின் கையொப்பத்தைக் காட்டுங்கள் என்று ஆளுநர் அர்லேக்கர் கேட்பதன் சூட்சுமம் இதுதான்.
அப்படிப் பார்த்தால் ஆளுநர் அர்லேக்கர் யாருக்கு வேலை செய்கிறார்? யார் கட்டளையை நிறைவேற்றுகிறார் என்பது தெளிவாகப் புரிந்து விடும். இந்தப் பிரச்சினை நீண்டு கொண்டு போகப் போக விஜய்க்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்ற விஷயத்தை இவர்கள் ஏன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. ஒருவேளை மீண்டும் தேர்தல் வந்தால், இந்த முறை விஜய்யின் TVK 130 ஆசனங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு நடத்தும் இந்த நாடகம் உடனே முடிவுக்கு வர வேண்டும்! மக்கள் கொடுத்த ஆணையை மத்திய அரசும், ஆளுநரும் மதித்து நடக்க வேண்டும்!தேர்தல் கவரேஜ்