வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்
18 Dec,2025
நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால் வங்கதேச மக்களுக்கு ஏற்படும் சிக்கல் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவைர உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். கனவு கூட்டணியை கணியுங்கள்! தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.
இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக உள்ளார். பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை சீண்டி வருகிறார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை துன்புறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே தான் வங்கதேச தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஹஸ்னாத் அப்துல்லா என்பவர் நம் நாட்டுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ‛‛இந்தியாவின் எதிரிகளுக்குத் தங்கள் நாட்டில் புகலிடம் அளிப்போம்.இந்தியாவை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகள் மற்றும் இந்திய எதிர்ப்பு கொண்ட சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து தங்கவைப்போம். இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை'இந்தியாவில் இருந்து பிரிப்போம்'' என்று மிரட்டினார்.
"இந்தியாவை 2 துண்டாக்குவோம்".. 7 வடகிழக்கு மாநிலங்களை தனியாக பிரிப்போம்! வங்கதேசம் திமிர் பேச்சு இந்த வெறுப்பு பேச்சால் மத்திய அரசு டென்ஷாகி உள்ளது. இதனால் நேற்றைய தினம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகும்படி கூறியது. அவரும் ஆஜரானார். இதையடுத்து வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூல் பற்றிய கவலையை இந்தியா தெரிவித்தது.
அதோடு டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தது. வங்கதேசத்தில் சமீப காலமாக பயங்கரவாத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துகளை கூறி வருகிறது. அதனை நிராகரிக்கிறோம். இதுபற்றி வங்கதேச இடைக்கால அரசு முழு விசாரணை நடத்தவில்லை. அதுதொடர்பான ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் அமைதியாக தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்.
ஆனால் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கள் இருதரப்பு உறவை பலவீனப்படுத்தும் என்றும் வார்னிங்கும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசத்துக்கு முதற்கட்டமாக பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது. நம் நாடு வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜமுனா ஃபுயூட்டர் பார்க்கில் உள்ள இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மையத்தை மூடியுள்ளது. பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு நேற்று மதியம் 2 மணிக்கு இந்த விசா மையம் மூடப்பட்டது. இதுதொடர்பாக விசா மையம் சார்பில்,
‛‛இன்று (அதாவது நேற்று புதன்கிழமை) விசா விண்ணப்பத்தாரர்களுக்கான மாற்று அட்டவணை சிறிது காலத்துக்கு பிறகு அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கதேசத்தின் ராஜ்ஷாஹி, குல்னா நகரில் உள்ள 2 விசா மையங்களும் இன்று மூடப்பட்டது. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான விசா விண்ணப்பங்கள் சார்ந்த பணிகள் இந்த மையத்தில் தான் நடந்து வந்தது. இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தூதரகம் அனுமதி வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு விசா பெற்று இந்தியாவுக்கு வர முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்துக்காக ஏராளமானவர்கள் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து சென்றனர். தற்போது இந்த மையங்கள் மூடப்பட்டுள்ளதால் வங்கதேசத்தின் இந்தியா வருவதற்கான விசா பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு. இதனால் இந்தியாவுக்கு வணிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வர திட்டமிட்ட வங்கதேசத்தின் பாதிக்கப்பட உள்ளனர்.