ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு
04 Dec,2025
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (04) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
புது டில்லியில் அமைந்துள்ள பாலம் விமானப்படை தளத்தில் அவரது விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். ரஷ்ய தலைவருக்கு இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள், உலக அரசியல் சூழ்நிலை, முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய வீதிப் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன.
இந்திய–ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய விஜயமாக இது அமையவுள்ளது.