தாய்லாந்து சைபர் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 200 இந்திய இளைஞர்கள்! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
06 Nov,2025
தாய்லாந்தில் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
மியான்மரில் இருந்து தாய்லாந்து அழைத்துச் செல்லப்பட்டு மியாவாடி பகுதியில் அடைத்து வைத்து இந்திய இளைஞர்கள் சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு அளித்த புகாரில் மியாவாடி பகுதியில் அதிரடி சோதனை நடத்திய மியான்மர் ராணுவத்தினர் இந்தியா உள்பட 28 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை பத்திரமாக மீட்டனர்.
இதில் மீட்கப்பட்ட 465 இந்திய இளைஞர்களில் 270 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் நாடு திரும்பினர். மீதமுள்ள இந்தியர்களை அடுத்தடுத்து அழைத்து வரும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை மோகத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்களை நம்பி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.