சென்னையில் பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் பாஸ்போர்ட் சேவைகளை பெறலாம். பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க, Passport Seva என்ற வெப்சைட்டையும் உபயோகிக்கலாம். இதுபோக, நடமாடும் பாஸ்போர்ட் சேவையும் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
வருடந்தோறும் பாஸ்போர்ட் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.. வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்ல நேரிடுகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்டவிதிகளில், நீண்ட காலமாகவே திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.. காரணம், கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது என்பதால், அது சம்பந்தமான எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது.. பாஸ்போர்ட் சட்டம் பிறகு கடந்த மார்ச் மாதம் பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்திருந்தது..
அதன்படி, 2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்றும், பிறப்பு சான்றிதழ் கட்டாயம் மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதாவது கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்பதையும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. Powered By அதேபோல கடந்த ஜுன் மாதம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், தங்களின் வாழ்க்கை துணையை சேர்க்கவும், நீக்கவும், புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்தது.. இணைப்பு ஜெ இதற்கு காரணம், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது,
மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. இதனை தவிர்க்கவே "இணைப்பு ஜெ" என்ற புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
" பாஸ்போர்ட் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், எந்தவிதமான சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், பாஸ்போர்ட் பெறுவதில் இப்படியான சில விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. எம்-பாஸ்போர்ட் -
இந்நிலையில், சென்னையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. வழக்கமாக, வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக நுண்ணறிவு போலீசார் நேரடியாகவே செல்வார்கள்.. விண்ணப்பதாரர்களிடம் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை, தங்களின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பணியை மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு
என்ற மொபைல் ஆப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.. அத்துடன், விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிக்கு கையடக்க கருவியும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நுண்ணறிவு போலீஸ் அதிர்ச்சி அந்த வகையில், இந்த வருடம் ஜூலை வரை தமிழகம் முழுவதும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்திருந்த, 79.40 லட்சம் நபர்கள் குறித்து, நுண்ணறிவு போலீசார் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்..
. அப்போது 79.40 லட்சம் பேரில், 32,985 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நுண்ணறிவு போலீசார் சொல்லும்போது, 'போதை பொருள் கடத்தல்காரர்கள், வேறு வேறு யுக்திகளை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளார்கள்.. அவர்களின் முயற்சியை முறியடிக்க தொடர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.