அணு ஆயுதங்களை காட்சிப்படுத்திய சீனா..
11 Sep,2025
இரண்டாம் உலகப்போர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ அணிவகுப்பை சீனா நடத்தியிருந்தது. இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் பயங்கரமானவை என்று பேச்சுகள் ஒரு பக்கம் எழுந்திருந்த நிலையில், மறுபுறம் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதிவேக ஏவுகணைகள், அடுத்த தலைமுறை டாங்கிகள், ஸ்டெல்த் UCAVகள், உயர்-சக்தி லேசர்கள், சைபர் தாக்குதலால் பாதிக்கப்படாத செயற்கைக்கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகள் என பல ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இத்துடன் ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தனது புதிய டைப்-100 டாங்கையும் சீனா அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை இது வெறும் கண்காட்சி மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. இது குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் சுயாஷ் தேசாய் கூறுகையில், சீனாவின் பல போர் கருவிகள் இந்தியாவின் திட்டத்தை போல இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சீனா காட்சிப்படுத்தியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதற்காவே அவை அனைத்தும் பயன்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
சீனா 141 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.4 கோடி பேர் ராணுவத்தில் சேரும் வயதை எட்டுகிறார்கள். இந்தியாவில் இது 1.9 கோடியாக இருக்கிறது. மற்ற ஒப்பீடுகள் கீழ்வருமாறு சீனா ராணுவ வீரர்கள் - 20 லட்சம் ரிசர்வ் படை - 5.10 லட்சம் துணை ராணுவம் - 6.25 லட்சம் ராணுவ செலவு - ₹22,296 கோடி மொத்த ராணுவ விமானங்கள் - 3,309 போர் விமானங்கள் - 1,212 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் - 3 நீர்மூழ்கி கப்பல்கள் - 61 மொத்த ராணுவ கப்பல்கள் - 754
இந்தியா ராணுவ வீரர்கள் - 14 லட்சம் ரிசர்வ் படை - 11 லட்சம் துணை ராணுவம் - 25 லட்சம் ராணுவ செலவு - ₹6,262.5 கோடி மொத்த ராணுவ விமானங்கள் - 2,229 போர் விமானங்கள் - 513 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் - 2 நீர்மூழ்கி கப்பல்கள் - 18 மொத்த ராணுவ கப்பல்கள் - 293 ஆதாரம்: குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ். இதுதான் இரு நாடுகளின் பலம். எனவே சீனாவின் ராணுவ அணிவகுப்பை பார்த்து இந்தியா பயப்படாது. ஆனால் ராணுவ அணிவகுப்புகளுக்கு அப்பால் இது வேறு ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதாவது பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உள்நாட்டு தேசியவாதத்தை வலுப்படுத்தும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தவே இந்த பேரணி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.