கத்தாரில் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்.இந்திய தூதரகம் வார்னிங்
23 Jun,2025
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா திடீரென தாக்குதலை நடத்தியது. இதனால் கத்தாரில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் மோதல் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன.
இந்தச் சூழலில் தான் திடீரென ஈரான் மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள அணு சக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உள்ளே வந்தது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்தியத் தூதரகம் இதற்கிடையே கத்தார் மீது ஈரான் தாக்குதலைத் தொடங்கிய உடனேயே அங்குள்ள இந்தியத் தூதரகம், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. தோஹாவில் உள்ள ராணுவ தளங்கள் குறிவைத்து ஈரான் தாக்குதலை ஆரம்பித்த உடனேயே இந்த எச்சரிக்கை வந்துள்ளது. கத்தாரில் இந்தியர்கள் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.
இதன் காரணமாகவே இந்தியத் தூதரகம் உடனடியாக இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. முக்கியமான எச்சரிக்கை இந்தியர்கள் பாதுகாப்பாகவும், வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்து அமைதியாக இருங்கள்.
கத்தார் அதிகாரிகள் வழங்கும் தகவல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். தூதரகம் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் நிலைமை தொடர்ந்து அப்டேட் செய்யும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கத்தாரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம் கத்தாரில் தான் இருக்கிறது.
கத்தாரின் அல் உடேத் விமான தளம் மீது அமெரிக்கா இப்போது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்டிற்கான தலைமையகமாகச் செயல்படுகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் பாமை வீசி தாக்குதல் நடத்தியது. இது ஈரானைக் கடுமையாகக் கோபப்படுத்தியது. அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம் என்றே ஈரான் சொல்லி வந்தது. அதன்படியே ஈரான் மீது அமெரிக்கா இப்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
கத்தார் சொல்வது என்ன அல் உடேத் விமானத் தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலை கத்தார் கண்டித்துள்ளது. அதேநேரம் ஈரானின் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தற்போது கத்தாரின் வான்வெளி பாதுகாப்பாக உள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தெரிவித்துள்ளது. கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் 6 ஏவுகணைகளை வீசியதாகத் தெரிகிறது. அந்த ஆறுமே இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஈரான் தனது தாக்குதலைத் தொடர்ந்து நடத்துமா? இல்லை இத்தோடு விட்டுவிடுமா என்பதைப் பொறுத்தே அங்கு நிலைமை இருக்கும்.