ஆஸ்திரேலியாவில் போலீஸ் தாக்கியதில் படுகாயமடைந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி பலி
15 Jun,2025
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் வசித்து வந்தவர் கவுரவ் கண்டி(42).இவர் கடந்த 3ம் தேதி அடிலெய்டின் பைனிஹாம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் கவுரவ் மது போதையில் இருந்துள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இது குடும்ப தகராறாக இருக்காலம் என நினைத்து கவுரவை கீழே தள்ளி அவரது தலையை தரையில் அழுத்தி கைது செய்ய முற்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார். அவருடைய நிலைமை மோசமானதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.